×

கோவை மருத்துவ கல்லூரி விடுதியில் சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை

பீளமேடு: சென்னை நந்தனத்தை சேர்ந்தவர் வெங்கிடவரதன். தொழிலதிபர். இவரது மகள் நந்தினி (22). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 4ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்துள்ளார். நந்தினி நேற்று காலை 7 மணியளவில் தாயாருடன் செல்போனில் பேசி உள்ளார். அதன்பின், வகுப்புக்கு செல்லாமல் அறையிலேயே இருந்துள்ளார். வார்டனின் உதவியாளர் வந்து பார்த்தபோது அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவர் கதவை தட்டினார். ஆனால், திறக்கவில்லை. இது குறித்து அவர் விடுதி வார்டன் மற்றும் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே, அறையின் மேல்பக்கத்தில் உள்ள கண்ணாடி வழியாக பார்த்தபோது நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து. சென்னையில் இருந்து பெற்றோர் கோவை வந்தனர். நந்தினி தற்கொலைக்கான காரணம் குறித்து பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர். …

The post கோவை மருத்துவ கல்லூரி விடுதியில் சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbatore ,medical college ,Peelamedu ,Venkitavarathan ,Nandanam, Chennai ,Nandini ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...